ETV Bharat / state

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டடங்கள்; திறந்துவைத்த முதலமைச்சர் - தமிழ்நாடு முதலமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஸ்டாலின் திறந்து வைத்தார்
author img

By

Published : Nov 2, 2022, 3:20 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 6 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 லட்சத்து 86ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலைக் கல்லூரி மாணவியர் விடுதிக்கட்டடம், மதுரையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக்கட்டடம், திருவாரூர் எடையூரில் 1 கோடியே 27 லட்சத்து 12ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

கொரடாச்சேரியில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம், தென்காசி சோலைச்சேரியில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், கிருஷ்ணகிரி போஜனபள்ளியில் 3 கோடியே 35 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதிக்கட்டடம், என 300 மாணவர்கள் மற்றும் 150 மாணவிகள் பயன்பெறும் வகையில் 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் தேர்வாயில் 3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், காஞ்சிபுரம் மௌலிவாக்கத்தில் 3 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடியே 74 லட்சத்து 94ஆயிரம் ரூபாய் செலவிலும், மயிலாடுதுறை கொண்டலில் 1 கோடியே 62 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவிலும், 916 மாணவர்கள் மற்றும் 839 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டப்பல்வேறு கட்டடங்களைத் திறந்துவைத்தார்.

செங்கல்பட்டு குமிழியில் 12 கோடி ரூபாய் செலவிலும், நீலகிரி மு. பாலாடாவில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் செங்கரையில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும் ஒரு பள்ளியில் 480 மாணவர்கள் பயிலும் வகையிலும் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் என மொத்தம் 37 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்குத்தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: ராஜராஜசோழனின் பிறந்த விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.