மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட, புரசைவாக்கம் தானா ரோட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”மத்திய சென்னை திமுக கோட்டை. தயாநிதி மாறன் ஏற்கனவே இந்த தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றுள்ளார். மத்தியில் அமைச்சராக அவர் பதவி வகித்தபோது பல சாதனைகள் செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.
மேலும், மத்தியில் மோடி ஆட்சி தோல்வி அடைந்தால் இங்கு எடப்பாடி ஆட்சியும் தோல்வியடையும் என்றும், மோடி தயவில் இங்கு எடப்பாடி ஆட்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமரானால், எடப்பாடியே துண்டை காணும், துணியை காணும் என்று ஓடிவிடுவார் என்றும், தேர்தல் முடிவுக்குப் பின்பு அவர் அரசியல் வாழ்வே கிழியப்போகிறது" என கிண்டலாக விமர்சித்தார்.
மேலும் பேசிய ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆறடி இடம் தர மறுத்தவருக்கு, இந்த தமிழ்நாட்டில் இடம் தரலாமா என கேள்வி எழுப்பினார்.