கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிதிக்கு வழங்கப்படும் தொகை, கரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக, அரசு மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை வழங்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலம் கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்கவும் 50 கோடி ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகள், நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தச் சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை வாங்க இரண்டாம் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 186.15 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே.28) தெரிவித்துள்ளார். சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள்-செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்க ரூபாய் 41.40 கோடி பணம் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது. pic.twitter.com/NJdFebNHMn
">இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 28, 2021
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது. pic.twitter.com/NJdFebNHMnஇன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 28, 2021
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது. pic.twitter.com/NJdFebNHMn
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’நேற்று வரை (மே.28) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 86.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள்-செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் முதல் இலவச மளிகை