ETV Bharat / state

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

author img

By

Published : Feb 24, 2020, 12:32 PM IST

சென்னை: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்குத் தொடர்பாக தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்து வருகின்றனர்.

ssi-wilson-murder-case
ssi-wilson-murder-case

குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் (57) பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தவ்பிக் (27) ஆகிய இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது இரண்டு பேரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த நெல்லை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து இந்த அமைப்பில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்த இரண்டு பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு முகமை) அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் வில்சனை சுட்டுக்கொன்ற இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து இரண்டு பேர் மீது என்.ஐ.ஏ அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றி, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார். பின்னர் குமரி மாவட்ட காவல் துறையினர் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் என்.ஐ.ஏ அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத அமைப்பிற்கு சிம் கார்டு சப்ளை செய்த விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் வீட்டிலும் மேற்கொண்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல்வேறு நபர்களின் பெயர்களும் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று வில்சன் கொலை வழக்கு, பயங்கரவாதிகளுக்கு சிம் கார்ட் சப்ளை செய்ததாகக் கூறி சென்னை, கடலூர், தூத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் என்.ஐ.ஏ காவல் துறையினர் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ராஜேஷ் என்பவர் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்ட் சப்ளை செய்ததாக எழுந்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல்கள் வெளிவரும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

நான்கு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

இதையும் படிங்க: தாயைக் கொன்று உடலை சாக்கடையில் வீசிய மகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.