ரயில்வே துறையில் தனியாரை புகுத்துவதால் ரயில்வே ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில், தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் எஸ்ஆர்எம்யூ உள்ளிட்ட பல்வேறு சங்க ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் என கூட்டாக 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "கரோனா காலத்தில் உணவு பொருள்கள் தடையில்லாமல் கிடைத்திடவும், விலைவாசி உயராமல் இருந்ததற்கு காரணம் ரயில்வே துறை. இந்த துறை அரசிடம் இருந்ததாலும், அதன் ஊழியர்கள் மக்கள் சேவை புரிந்ததாலும்தான் இது சாத்தியமானது.
ஏற்கனவே சிறப்பு ரயில்கள் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், சரக்கு போக்குவரத்து தனியார் மயமானால் விலைவாசி அதிகரிக்கும். அதுபோல் ரயில் டிக்கெட் அதிக விலைக்கு உயர்த்தப்படும்” என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எஸ்ஆர்எம்யூ சங்கத்தின் சென்னை கோட்ட கூடுதல் செயலாளர் வெற்றிவேல், தாம்பரம் செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட ரயில்வே சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் எஸ்ஆர்எம்யூ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!