ETV Bharat / state

ஏன் தாமதம்? ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்

தமிழ்நாடு அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைப்பதற்காக அரசாணை வெளியிட்டும், அதற்கான முதற்கட்டப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏன் தாமதம்? ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்
ஏன் தாமதம்? ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்
author img

By

Published : Aug 4, 2021, 8:07 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கான அரசாணையை கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அன்று வெளியிட்டது.

அரசாணை வெளியிட்டும் அதற்கான முதற்கட்ட வேலைகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 1.48 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த காப்பகத்திற்கான உயர் மட்ட அலுவலர்களை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் காப்பகத்தை முழு வீச்சில் தொடங்க முடியவில்லை எனவும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

புலிகள் காப்பகத்தை தொடங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐந்தாவது புலிகள் காப்பகம்

தமிழ்நாட்டில் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் மற்றும் களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 264 புலிகள் இருந்தது.

பிறகு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயம், தேனியில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதை வன விலங்கு ஆர்வலர்கள், வன அலுவலர்கள் கண்டறிந்து இந்த இரண்டு வனப்பகுதிகளை இணைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்க ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்தனர்.

வன விலங்கு ஆர்வலர்கள் பேட்டி

மேலும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமும் இதற்கு அனுமதியளித்த பிறகு, கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது.

திட்டம் தாமதம்

"இந்தப் புலிகள் காப்பகத்திற்காக எந்த ஒரு முதற்கட்ட வேலையும் நடைபெறவில்லை. மேலும் காப்பகத்திற்கான கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்தத் திட்டம் தாமதமாகிறது" என்றார் ஒரு உயிரியலாளர்.

ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை

வன விலங்கு ஆர்வலர் ஜோசப் ஹூவர் கூறுகையில், "இந்தப் புலிகள் காப்பகம் தொடங்கப்பட்டால், தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை உயரும். இந்தத் திட்டத்தின் மூலம் காப்புக்காடுகள் இணைக்கப்படுவதால், விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து ஒரு புதிய வழித்தடம் உருவாகும்.

இதற்காக ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் காப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுத்தது. விரைவில் இதற்கான அலுவலர்களை நியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் காப்பகம் அமையவிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம் மாற்றம் செய்ய அரசு திட்டமிடவேண்டும் எனக் கூறினார்.

வைகை வளம் பெருகும்

இதைத் தொடர்ந்து வன விலங்கு ஆராய்ச்சியாளர் அசோக சக்கரவர்த்தி பேசுகையில், "புலிகள் அதிக அளவில் காடுகளில் இருந்தால், காடுகளின் வளம் பெருகும்.

வளம் பெருகினால் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும். இதனால் நீர் ஆதாரம் நல்ல முறையில் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் தொடங்கப்பட்டால், மதுரையில் உள்ள வைகை ஆறு வளம் பெரும்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தினால் தாமிரபரணி ஆற்றில் நீர் இருப்பு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இதற்கு காரணம் அங்கு வாழும் புலிகள் தான்" என்றார்.

பெரும்பாலான புலிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்வதால், அந்தப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

எனவே தமிழ்நாடு அரசு ஐந்தாவது புலிகள் காப்பகம் ஆகவுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என அசோக சக்கரவர்த்தி வலியுறுத்தினார்.

இன்னும் இரண்டு மாதங்களில்..

இது குறித்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறுகையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் குறித்து அறிக்கை ஒன்றை மறுபடியும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம்.

ஆணைய அலுவலர்களின் ஆய்வுக்குப் பின், இது காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

காப்பகத்திற்கு உயர் அலுவலர்களை நியமனம் செய்யும் பணி செயல்பாட்டில் உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த புலிகள் காப்பகம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இரண்டு வனப்பகுதிகளில் 14 புலிகள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆறு புலிகளும், மேகமலையில் எட்டு புலிகளும் இருப்பது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தெரிய வந்தது. அதில் மூன்று ஆண் புலிகள், 11 பெண் புலிகள் எனக் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம் - வளமான காடுகளை உருவாக்கும் புலிகளை காப்போம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.