துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்லம் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து மதுரைசெல்லும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உள்பட 149 பயணிகள் ஏறி அமர்ந்தனர். விமானத்தை நடைமேடையிலிருந்து ஓடுபாதைக்கு விமானி இயக்க முயன்றார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அவர் கண்டுபிடித்தார்.
இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் நடைமேடைக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்தபின்னர், இரண்டு மணி நேரம் காலதாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: குடியரசு விழா: டெல்லியில் ஒன்னே முக்கால் மணி நேரம் விமானம் பறக்கத் தடை!