சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021 நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் பதுக்குதல், கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்க கண்காணிக்கும் பொருட்டு, நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்டம் வாரியாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், கலால் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு, அந்தந்த மாவட்டங்களில் சட்டவிரோத மதுபானம் பதுக்குதல், விநியோகம், விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும், டாஸ்மாக் சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மதுக்கூடங்கள் செயல்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டும், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் பதிவேடு சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்டவிரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம், விற்பனை தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் சிறப்புக் குழு அலுவலர்களின் கைப்பேசி எண்ணிற்குத் தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: எர்ணாகுளம்-பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 30 அன்று மாற்றுப்பாதையில் இயங்கும்