தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தாமிரபரணி ஆற்றில் தற்போது கழிவுநீர் கலக்கப்படுகிறதா? அவ்வாறு கழிவுநீர் கலந்துவந்தால் அதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி, மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? அவ்வாறு திட்டம் வைத்திருந்தால் அந்தத் திட்டத்தின் நிலை என்ன? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தாமிரபரணி ஆற்று நீரின் தற்போதைய தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அலுவலர் மற்றும் மூத்த அறிவியலாளர், திருநெல்வேலி மாவட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, மேலும் தாமிரபரணி ஆற்று நீர் பொதுமக்கள் குடிப்பதற்கான தரத்தில் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்