ETV Bharat / state

சென்னையில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு...!

சென்னை: சென்னையில் மிகவும் பதற்றமான 337 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை வாக்குச்சாவடி
author img

By

Published : Mar 24, 2019, 6:52 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை வியாசர்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்தல் பணியில் பங்குபெறும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரகாஷ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள் என 24 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி இன்று வழங்கப்பட்டது. நான்கு கட்டமாக இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 3800 மையங்களில் மிகவும் பதற்றமான 337 வாக்குசாவடிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்தல் வாக்குச்சாவடி மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள் என  24 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு  முதல்கட்ட பயிற்சி இன்று வழங்கப்பட்டு வருகிறதாகவும், நான்கு கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் 16 மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர் 
ஜனநாயகத்தில் தேர்தல் என்பது முக்கியாமன ஒன்று இதில் எந்த வித சிக்கலும், தவறுகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் நான்கு கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.

சென்னையில் மொத்தம் 3800 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன, இதற்கு 10,796 வாக்குபதிவு எந்திரம்(பேலட் யூனிட்),
5298 கட்டுபாட்டு கருவி,
6648 விவிபேட் எந்திரம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

சென்னையில் 144 பறக்கும் படையினர் பணியில் ஈடுபட்டுளதாக கூறிய அவர் அவர்களின் 
வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறதாகவும் கூறினார்.

அரசு கட்டிடங்களில் இருந்த 11800 விளம்பரங்களையும்,
தனியார் கட்டிடங்களில் இருந்த 12333 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
இனி விளம்பரங்கள் எழுதப்பட்டால் அவை அழிக்கப்பட்டு அந்தந்த கட்சியின் செலவில் சேர்க்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1-கோடி 37 லட்சத்து 130 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தகுந்த ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட
13.4 கிலோ தங்கம், 86.2 கிலோ வெள்ளி, 960 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னையில் உள்ள 3800 மையங்களில் 333 பதற்றமானவை 337 மிகவும் பதற்றமான என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விவபேட் எந்திரம் எத்தனை பொறுத்தவேண்டும் என்பதை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கிய பின் அதன் படி பின்பற்றுவோம். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.