ETV Bharat / state

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி: சிறப்புத் திட்டம் தீட்ட கமல் வலிறுத்தல் - local bodies budget

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலிறுத்தியுள்ளார்.

kamal Hassan
கமல்
author img

By

Published : Jul 21, 2021, 12:06 PM IST

மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய காரணியாக செயல்படுவதின் மூலம், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்கின்றன உள்ளாட்சி அமைப்புகள். அவற்றிற்கு வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்ய திறப்பு திட்டம் தீட்ட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்துள்ளது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம். ‘உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் பாதையை நோக்கி தமிழ்நாட்டை நகர்த்துவதும் மக்கள் நீதி மய்யத்தின் முதன்மையான அரசியல் செயல்பாடுகளுள் ஒன்று.

உள்ளாட்சி அமைப்புகளின் தேவை

பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பலநூறு கோடிகள் நிதி ஒதுக்கீடு என்பதுதான் பட்ஜெட்டின் வழக்கமான அறிவிப்பாக இருக்கும். ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை என்றைக்கு வரும், எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளாட்சித் தலைவர்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்வது கவனிக்கப்பட வேண்டியது.

உள்ளாட்சி அமைப்பானது, உள்ளூர்த் தேவைகளைத் திட்டமிடுவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு, சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம், உரிய நேரத்தில் நிதி ஆகியவை அவசியமாகின்றன. மாநில சுயாட்சி என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தி.மு.க , இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்தே உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவான சிறப்புத் திட்டத்தை முன்னெடுப்பது சிறந்தது.

உள் சுயாட்சி அரசு

1992இல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74ஆவது அரசியல் சாசனத் திருத்தம் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைத்தது. அது வெறும் காகிதங்களிலேயே தங்கிவிடாமல் இருப்பதற்கு அரசிடமிருந்து, அதிகாரப்பகிர்வு, நிதிப்பகிர்வு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'உள் சுயாட்சி அரசு' என்ற உன்னத நிலையை உள்ளாட்சி அமைப்புகள் எய்தும்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதி, மாநில திட்டக்குழு நிதி ஆகியவற்றை உள் சுயாட்சி அரசிற்குத் தாமதம் இல்லாமல் குறித்த காலத்தில் அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு முறையாக இல்லாததால், கிராம சபைக் கூட்டங்களும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் வருடத்திற்கு நான்கு முறை நடக்கும் சம்பிரதாயச் சடங்குகளாக முடிந்து போகின்றன.

முன்னோடியாகத் திகழும் கேரளா

கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன. மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள் சுயாட்சி அரசுகளுக்கு எந்தெந்த காலகட்டத்தில், எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற தெளிவான விவரம் அறிக்கையில் இடம் றவேண்டும். இதர முன்னுதாரணமாக கேரளா, மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வழக்கத்தை தமிழ்நாடு அரசு பின்பற்றலாம்.

கேரள அரசின் பட்ஜெட்டில் இணைப்பு அறிக்கை 4 என்பது ( Appendix IV : Details of provisions earmarked to LSGD institutions In the budget ) உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கும். ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் நிதியையே ஆதாரமாகக் கொண்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு, தேவையான காலத்தில் நிதி கிடைக்காவிட்டால் மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கிவிடும்.

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி

கேரள முதலமைச்சரின் நிவாரண நிதி இணையதளம் சிறப்பாக இருக்கிறது என்று அந்த நடைமுறையை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தினார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுபோல, பட்ஜெட்டின்போது உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வு குறித்த தெளிவான விவரங்களைத் தனியாக ஓர் இணைப்பு அறிக்கையாக வெளியிட வேண்டும்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா, மா.பொ.சிவஞானம், கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் மாநில சுயாட்சிக்கானப் பாதைகளை முன்னெடுத்தவர்கள். அவர்களின் வழி நடக்கும்தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்புத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலிருந்தே தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்- காங்கிரஸ் தனித்து போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.