நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 324 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன் இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,328ஆக உயர்ந்துள்ளது. மாநகராட்சி இந்தப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஐந்து ஆட்சிப் பணியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு கரோனா தடுப்புப் பணிகள் பற்றி தினமும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.கபசுரக் குடிநீர் வழங்கும் சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன் இன்று கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட திரு.வி.க நகர், அடையார் ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு மேற்கொண்ட பிறகு அந்தப் பகுதிகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். இதையும் படிங்க:சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு விவரம் இதோ!