ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் சிறப்பு ஹெல்த் மேளா! - தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் சிறப்பு ஹெல்த் மேளா

தமிழ்நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கத்தைத் தடுக்க மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களை (ஹெல்த் மேளா) அடுத்த வராம் முதல் நடத்த பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

special-medical-camp-will-happen-in-next-week-at-allover-tamil-nadu தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் சிறப்பு ஹெல்த் மேளா ...
special-medical-camp-will-happen-in-next-week-at-allover-tamil-naduதமிழ்நாட்டில் அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் சிறப்பு ஹெல்த் மேளா ...
author img

By

Published : Apr 14, 2022, 7:43 AM IST

சென்னை: கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தொற்றா நோய்களின் தாக்கத்தைத் தடுக்க மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களை (ஹெல்த் மேளா) அடுத்தவராம் முதல் நடத்த பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டின் 385 பகுதிகளில் முகாம்களை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் ரத்தம், சர்க்கரை பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

பேறு கால சேவைகள், இளம் சிறாருக்கான சேவைகள், தொற்று நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்பட 12 வகையான மருத்துவ சேவைகளும் மருத்துவ முகாமில் செய்யப்பட உள்ளன.

மேலும், காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் சார்ந்த பிரச்னைகள், பல் மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளன. கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநில மருத்துவமனைகளில் கரோனா உள்நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக அந்த நோய்த் தொற்றுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வந்தோம். இந்நிலையில், தற்போது ஏற்கெனவே இருந்ததுபோல தொற்றா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அடுத்த வாரம் நடத்தப்பட உள்ளது.

இதனால் தொற்றா நோய்கள் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதேபோன்று ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலும். ஹெல்த் மேளா எனப்படும் இந்த மருத்துவ முகாம் 385 பகுதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.என். நேரு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.