ETV Bharat / state

நாளை கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம் : சென்னை மாநகராட்சி - Special Corona Vaccination

2000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் நாளை (மார்ச் 20) நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

special-corona-vaccination-camp-in-chennai

author img

By

Published : Mar 19, 2021, 4:26 PM IST

சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி, கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 196 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை சென்னையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயதிற்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெற உள்ளது.

இந்தச் சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயதிற்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி பயனடையலாம். இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையினை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சிறப்பு முகாமில் கரோனா தொற்று தடுப்பு தொடர்பாக முகக்கவசம் அணிதல், சானிடைசர் (அ) கை கழுவுதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.