சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஜன.12ஆம் தேதி நடைபெற்றது.
இதில் முதலாவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பூஸ்டர் தடுப்பூசிசெலுத்திக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து 324 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக முன்களப்பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.