ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணி : தூய்மைக் காவலர்களுக்கு சிறப்பு விருது - தூய்மை காவலர்களுக்கு சிறப்பு விருது

சென்னை : கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதுகளை வழங்கினார்.

minister
minister
author img

By

Published : Aug 17, 2020, 7:07 PM IST

முதலமைச்சரின் ஆணைப்படி கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்களைப் பாராட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகக் கூட்டரங்கில் விருதுகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், "முதலமைச்சரின் உத்தரவின்படி கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா தொற்றைக் கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில், கரோனா தடுப்பு நடவடிக்கையில் வட்டார அளவில் 431 பொறுப்பு அலுவலர்களும், கிராம ஊராட்சியில் 12 ஆயிரத்து 525 பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் இதுவரை, களப்பணியாளர்களுக்கு 31 லட்சத்து 78 ஆயிரத்து 851 முகக்கவசங்களும், எட்டு லட்சத்து 12ஆயிரத்து 332 கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், இதர ஊராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்து 213 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் ஊராட்சிகளினால் கொள்முதல் செய்யப்பட்டு களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தன்னலமின்றி நாட்டு நலனுக்காக அயராது செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தூய்மைக் காவலர் சித்ரா, திருவள்ளூர் மாவட்டம், அரக்கம்பக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி, காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயப்பாளையத்தைச் சேர்ந்த தே.சத்யா ஆகிய மூன்று தூய்மைக் காவலர்களுக்கு விருது வழங்குவதில் நான் பெருமிதம் அடைகிறேன்" என்றார்.

மேலும், கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ஆகஸ்டின் ராஜ், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சி.கதிரேசன் , கோயம்புத்தூர், வெல்லிமலைபட்டினம் ஊராட்சி செயலாளர் எம். மாரப்பன், விழுப்புரம், அய்யன் கோவில்பட்டி ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரான கே.பாண்டுரங்கன் ஆகியோரையும் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.