ETV Bharat / state

காணும் பொங்கல் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் - காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 16, 2023, 10:36 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜன.17) காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாட தமிழ்நாட்டின் முதன்மையான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையையொட்டி, 2023ஆம் ஆண்டு ஜன. 16, ஜன. 17 ஆகிய நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்துள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக காணும் பொங்கல் அன்று நாளை (ஜன.17) திறக்கப்படும். பூங்கா காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவரவகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிப்பதைப் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரை இரண்டு முறையும் யானை குளியலை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரைதொகுப்புகள் இரண்டு பெரிய LED திரையில் திரையிடப்படுகிறது.

பார்வையாளர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்படக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் வசதி, உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், உதவி மையம், மருத்துவ உதவி மையம், ஓய்வு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களை சிரமமின்றி நிறுத்துவதற்கு அடையாளம் குறிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு வர இலவச போக்குவரத்து வசதி சேவை செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் 20 முழுமையாக செயல்படும் நுழைவுச்சீட்டு வழங்குமிடத்துடன் கூடுதலாக வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு நுழைவுச்சீட்டு வழங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கையில் பெற்றோரின் விவரம் அடங்கிய அடையாள அட்டை பொருத்தப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உபயோகப்படுத்தும் வசதியுள்ளது. பார்வையாளர்களுக்கு மருத்துவ அவசர உதவிக்கு 5 அவசர ஊர்தியுடன் 9 மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பூங்காவில் உள்ள எட்டு இருப்பிடங்களான, குறுகிய விலங்கு இருப்பிடங்கள் மற்றும் மூடிய அமைப்புடைய விலங்கு இருப்பிடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஒரு சீருடை அணிந்த பணியாளர்கள் அனைத்து விலங்கு இருப்பிடங்கள் மற்றும் பூங்காவிலுள்ள பிற இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளுவர் தினம்... கேக்கில் கற்பனை கூகுள் டூடுல் - ஐடி ஊழியர் அசத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.