அதிமுகவுக்கு எதிராகவும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவிற்கு தமிழ்நாடு சபாநாயகர் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், தன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிரபு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடி சபாபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெற்ற நிலையில், எம்எல்ஏ பிரபுவும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.