ETV Bharat / state

‘அரசியலமைப்புச் சட்டம் 200’ஐ ஆளுநர் படிக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு - what is Article 200

தமிழ்நாடு ஆளுநருக்கு ஏதோ அழுத்தம் இருப்பதனால் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

‘அரசியலமைப்புச் சட்டம் 200’ஐ ஆளுநர் படிக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு!

author img

By

Published : Mar 10, 2023, 5:58 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இன்று (மார்ச் 10) தலைமைச் செயலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அப்பாவு, “2022 அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, 2023 மார்ச் 8ஆம் தேதி வரை தன்னிடம் வைத்திருந்த ஆளுநர், அதனை ஆய்வு செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் செய்தாரா என தெரியவில்லை.

தமிழ்நாடு அரசால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தடை சட்ட மசோதாவிற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர், தடை சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்துவது மட்டுமல்லாமல், நேற்று முன்தினம் அதனை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அரசின் வரம்புக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200, மிகத் தெளிவாக இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநில ஆளுநர், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவருடைய ஒப்புதலுக்குச் சென்றால், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம்.

அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது தொடர்பான சந்தேகங்களைக் கேட்கலாம். அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது தன்னிடம் தொடர்ந்து ஆய்வுக்காக வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இல்லை என, ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என தெரியவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் 200இல் ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன என்பது குறித்து உள்ளது. அதை அவர் படிக்க வேண்டும். சட்டமன்றம் ஒரு புனிதமானது, மாண்புடையது மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு களங்கம் ஏற்படுகின்ற வகையிலான அந்த வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200ஐ சரியாகப் படித்துவிட்டு, ஆளுநர் அந்த வார்த்தைகளைப் போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என கருதுகிறேன்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்பிக்கள் பலரும் பேசியிருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே இது புதிதாக கொண்டு வரப்பட்டச் சட்டம் கிடையாது. இவற்றையெல்லாம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி படித்திருந்தால், தமிழ்நாடு அரசு இயற்றிய தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பார். ஆனால் ஏனோ தெரியவில்லை. தமிழ்நாடு ஆளுநரின் கவனத்திற்கு இந்த விஷயங்கள் எல்லாம் செல்லாமல் போய்விட்டது.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது, ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றும், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்தும், மக்களின் கருத்துக்களை கேட்டும், அதன் அடிப்படையில்தான் இந்த தடை சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது, ஆளுநர் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகத்தான் இருந்துள்ளார்.‌ ஆனால், அதன் பிறகு அவருக்கு எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. இந்த மசோதாவிற்கு எதிரான மனநிலைக்கு அவர் மாறிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் அவர் சூதாட்ட கம்பெனிகளின் உரிமையாளர்களை பார்த்ததாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

அந்த பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது. இவ்வளவு நாள் காலம் எடுத்தும் அவர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், அவருக்கு வேறு எங்கிருந்தோ அழுத்தம் வந்துள்ளது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதையும் ஆளுநர் இதுவரை விளக்கவில்லை.

சட்டமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறிய அந்த வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும். யார் சொல்லி அந்த வார்த்தையை அவர் கேட்டார் எனத் தெரியவில்லை. சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா?” என்றார்.

இதையும் படிங்க: "ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரி, ஆளுநருடன் விவாதிக்கத் தயார்" - அமைச்சர் ரகுபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.