ETV Bharat / state

விலங்குகள் வதை தடுப்பு சிறப்பு அதிகாரியாக எஸ்.பி.சண்முகப்பிரியா நியமனம் - டிஜிபி ஆணை

author img

By

Published : Mar 27, 2023, 7:14 PM IST

தமிழ்நாட்டில் விலங்குகள் வதைக்கப்படுவதை தடுக்க சிறப்பு அதிகாரியாக எஸ்.பி.சண்முகப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அனைத்து மாவட்டத்திலும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SP Shanmugapriya
விலங்குகள்

சென்னை: தமிழ்நாட்டில் விலங்குகள் மீதான தாக்குதல் மற்றும் விலங்குகளின் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக விலங்கு வதை தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விலங்குகள் நல வாரியத்திடம் பல்வேறு புகார்களும் வந்துள்ளன. விலங்குகள் வதை தொடர்பான புகார்களை காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக எஸ்.பி.சண்முகப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக சண்முகப்பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் என்.ஆர்.ஐ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சண்முகப்பிரியா, விலங்குகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை மாவட்ட அளவிலான கள அதிகாரிகள் இடையே விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இனி, விலங்குகள் வதைக்கு எதிரான எல்லா புகார்களும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக பதிவு செய்யப்படலாம். அதேபோல் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்களது தலைமையகத்தில் டிஎஸ்பி அல்லது உதவி ஆணையர் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியை மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்குமாறும், அவர்களது தொடர்பு விவரங்களை மாநில சிறப்பு அதிகாரி சண்முகப்பிரியாவுக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட சிறப்பு அதிகாரிகள் மாநில சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "முதல் பேருந்தை தாமதமாக இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை" -அமைச்சர் வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.