பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திரைத் துறை பிரபலங்கள் முதல் தமிழ்நாடு மக்கள் அனைவரும் அவர் உடல்நலம் பெற பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 25) மதியம் ஒரு மணி அளவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனைை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்: மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எஸ் பி பாலசுப்ரமணியம் சமீபத்திய செய்திகள்
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதனை அவர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
![எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்: மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாலசுப்ரமணியம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:55:32:1601022332-spb-2509newsroom-1601022296-212.jpg?imwidth=3840)