ஆகஸ்ட் 5ஆம் தேதி பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து இரண்டாவது முறையாக அவரது மகன் எஸ்பி சரண் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், "நேற்று(ஆக.16) போன்றே தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாக என்னிடம் கூறியுள்ளனர். மேலும், அவர் விரைவில் மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.