ETV Bharat / state

'புதிய வீட்டு மனைகளை உருவாக்கும்போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'

புதிய வீட்டுமனைகளை உருவாக்கும்போது மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதை உறுதி செய்யும்படி, நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு (DTCP) தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

"புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'

author img

By

Published : Apr 9, 2022, 3:23 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தில், அடுக்குமாடிக்குடியிருப்பு ஆக்கிரமிப்புகளால், அரசன்கழனி, வேடந்தாங்கல் நகர், நேதாஜி நகர், போலினெனி மலை பகுதி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் DLF பகுதி உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப்பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கை நேற்று (ஏப்ரல்.8) விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதி துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இனி வரும் காலங்களில், விவசாய நிலத்தை விவசாயம் தவிர்த்த மற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் போது அனைத்து விதிகளும் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், விதிகளை முறையாகப் பின்பற்றாத கட்டுமானங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்

மேலும், வெள்ளநீர், நீர்நிலைகளுக்குச் செல்ல ஏதுவாக போதுமான வடிகால் கால்வாயினை நீர்வள ஆதார அமைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், வடிகால் கால்வாயினை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விதிகளை மீறி ஆக்கிரமித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வெள்ளத்தடுப்புத் திட்டம் மற்றும் பணிகள் குறித்து நீர்வள ஆதார அமைப்பின் ஆறு மாதத்திற்கு ஒருமுறை திட்டம் நிறைவடையும் வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையான வெள்ளத்தடுப்புப்பணி திட்டத்தினை தமிழ்நாடு தலைமைச்செயலாளர் கவனம் செலுத்தி உரிய நிதியை குறுகிய காலத்தில் ஒதுக்கி, பருவமழைக்குள் இந்தப் பகுதியில் வெள்ளம் பாதிப்பு ஏற்படாதவாறு திட்டத்தை முடிக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.