கரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்கள் போக்குவரத்து இன்றி கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அரசு உணவு, போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களுக்காக கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகளை அறிவித்தது.
இந்நிலையில் வரவிருக்கும் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி முதல் திருச்சி, கொல்லம், தஞ்சைக்கு நாள்தோறும் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று (அக். 24) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... தீபாவளி ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பேருந்துகள்!