சென்னை: சென்னை- கோவை இடைய ஒரு நாளைக்கு சுமார் 13 ரயில்களும், வாரத்திற்கு சிறப்பு ரயில் உட்பட 100க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கபடுகிறன. இதில் சென்னை - கோவை இடையே நேரடி சேவையாக கோவை சூப்பர் ஃபாஸ்ட், சதாப்தி, வந்தே பாரத், இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்கள் அரக்கோனம், காட்பாடி, சேலம், வழியகாக கோவை வரை இயக்கப்படுகிறது.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி, காட்பாடி, சென்னை சென்ட்ரல், கோவை வழியாக திருவனந்தபுரம் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரக்கோணம், சோளிங்கர் இடையே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால், கோவை இன்டர்சிட்டி ரயில் மட்டும் சென்னை - காட்பாடி இடையே ரத்து செய்யவதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, காட்பாடி - கோவை, கோவை - காட்பாடி வழித்தடத்தில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் சேலம் மண்டலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Udhaynidhi Stalin : சனாதன சர்ச்சை.. "சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வேன்.." - உதயநிதி ஸ்டாலின்!
இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, "அரக்கோணம், சோளிங்கர் ரயில் நிலையங்களில் தண்டவாள புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 13, 20, 27 மற்றும் அக்டோபர் 4ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் -12679), சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது, வேலூர் மாவட்ட காட்பாடி சந்திப்பில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவை புறப்பட்டு வரும் என கூறினார். இதே போல், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12680), காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுவதால், காட்பாடி சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: Palladam Murder case: 'தப்பிக்க முயன்றதால் சுட வேண்டிய கட்டாயம்' - பல்லடம் டிஎஸ்பி சௌமியா தகவல்!