ETV Bharat / state

கனமழை எச்சரிக்கை: தலைமைச் செயலருடன், வானிலை மையத்தலைவர் ஆலோசனை

தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தலைமைச் செயலாளருடன், தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.

இறையன்பு
இறையன்பு
author img

By

Published : Dec 6, 2022, 5:56 PM IST

சென்னை: தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவும் நிலையில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், சில மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மாநில பேரிடர் மீட்பு மைய செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல், வருவாய்த் துறையினருடன் பிற துறைகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மழை வெள்ளப்பாதிப்பு தடுப்பு குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அம்பேத்கருக்கு மாலை போடுவதில் பிரச்னை - பா.ஜ.க., வி.சி.க. தொண்டர்கள் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.