சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப் பிரிவிற்கு தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் இருந்து
அன்டனோவ் ஏஎன்- 124 ரஸ்லன் என்ற பெரிய ரக சரக்கு விமானம் வந்தது. இந்த சரக்கு விமானத்தில் 96 டன் எடைக் கொண்ட வாகன உதிரி பாகங்கள் வந்தன.

இதுபோன்ற உலகின் பெரிய ரக சரக்கு விமானம் கடந்த 2 மாதங்களில் சென்னை விமான நிலையத்திற்கு 3வது முறையாக வந்துள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
