துபாயில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி விமான நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேடிவேஸ்டி லிசியா மோலிப் என்ற 23 வயது பெண்ணை விசாரணை செய்தனர். அப்போது, அவர் 990 கிராம் கொகைன் போதைப் பொருளை கேப்சூல்களாக விழுங்கி வயிற்றில் வைத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கை தொடர்ந்து விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தென் ஆப்ரிக்கப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: ‘கிட்டு மீது நடவடிக்கை எடுத்தது ஏன்?’ - சுப. உதயகுமார் கேள்வி