ETV Bharat / state

அமைச்சருக்கு 'நோ' எடப்பாடிக்கு 'எஸ்' - அரசியல் செய்கிறதா ஆளுநர் மாளிகை! - தமிழ்நாடு அரசு

ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு 36 நாட்களாகியும் ஒப்புதல் அளிக்காது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Nov 23, 2022, 6:25 PM IST

Updated : Nov 23, 2022, 7:03 PM IST

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில், இதற்கான அவசரக் சட்டம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கையும் பெறப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 36 நாட்கள் கடந்தும் ஆளுநர் இதுவரை ஆன்லைன் வந்து விளையாட்டை தடை செய்யும் சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

அவசர சட்டத்தில் உள்ள அதே சரத்துகள் தான் சட்ட மசோதாவாகவும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சந்தேகங்கள் இருந்தால் அது தொடர்பான விளக்கத்திற்காக ஆளுநர் திருப்பி அனுப்பலாம். ஆனால், இதுவரை எவ்வித விளக்கமும் ஆளுநர் தரப்பில் இருந்து கேட்கப்படவில்லை.

இதனால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு 36 நாட்கள் ஆகியும் ஒப்புதல் கிடைக்காத நிலையில் தான் இது குறித்து ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். ஒருவாரத்திற்கு முன்பே நேரம் கேட்டும் இதுவரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு, சந்திப்பானது இன்று நடந்தது. மாநிலத்தின் முக்கிய பிரச்சனை குறித்து விவாதிக்க சட்டத்துறை அமைச்சருக்கு நேரம் ஒதுக்காமல், எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது ஏன் என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையும் படிங்க: லட்சுமணன் ரேகையை யார் மீறினாலும் நடவடிக்கை - அண்ணாமலை புது விளக்கம்!

Last Updated : Nov 23, 2022, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.