ETV Bharat / state

தம்பிதுரையை வைத்து புதிய கணக்கு போடும் ஈபிஎஸ்.. பச்சைக்கொடி காட்டுமா டெல்லி..?

author img

By

Published : Apr 6, 2023, 12:04 PM IST

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் புதிய அரசியல் கணக்கு இருப்பதாக பேசப்படும் நிலையில் அதற்கு டெல்லி பச்சைக்கொடி காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தம்பிதுரை தரப்பில் கூறப்பட்டாலும் அதிமுக - பாஜக கூட்டணி இடையே கருத்து மோதல், கர்நாடகா தேர்தல், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று விடாப்பிடியாக இருக்கிறார். ஆனால் ஈபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும், ஈபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடியவர்கள் மேல் உள்ள வழக்கு போன்ற காரணங்களுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி எம்.பி.தம்பிதுரையின் மூலம் சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலை மிக முக்கியமாக பாஜக கருதுகிறது.

கர்நாடகாவில் அதிமுக என்று சில பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் செயல்படும் பாஜக, யாருடைய வாக்குகளையும் இழக்க விரும்பவில்லை. அதனால் அங்குள்ள சிறு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்து வருகிறது. இதையும் ஒரு காரணமாக வைத்து தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக அமித்ஷா பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த எடப்பாடி பழனிசாமி, 'கர்நாடகாவில் 3 தொகுதிகள் வேண்டும்' என்று அமித்ஷாவிடம் கேட்டுவருமாறு தம்பிதுரையை அனுப்பியுள்ளார். இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதை போல, பொதுச்செயலாளராக தேர்வாகி கர்நாடகாவில் போட்டியிட்ட பெருமை, தேர்தலில் ஏ மற்றும் பி படிவத்தில் இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் உரிமம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தேவையை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரி பாஜகவிற்கு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஈபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்றால் ஓபிஎஸ்ஸை பாஜக கைவிடும் சூழல் ஏற்படும். அதனால் இன்னும் அதிமுக, பாஜக கூட்டணியில் குழுப்பமான சூழல் நீடித்து வரும் நிலையில் கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக முடிவெடிக்கும் என கூறப்படுகிறது. ஈபிஎஸ்ஸை உடனே பொதுச்செயலாளராக அங்கீகரிக்க பாஜக விரும்பவில்லை. அதனால் கர்நாடகா தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக இடங்கள் ஒதுக்காது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முறையாக அறிவிக்கவில்லை - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.