சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பெண்கள் தனியார் கல்லூரி வளாகத்தில் காவலன் SOS செயலி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகரன் பங்கேற்று கல்லூரியில் மாணவ மாணவியர் இடையே காவலன் SOS செயலியை பற்றி விரிவான விளக்க உரை அளித்தார்.
அதில் ”காவலன் SOS செயலியை பெண்களுக்கு பேருதவியாக இருக்கும், நெட்வொர்க் இல்லாத இடத்தில் காவலர்களை அழைக்க குறுஞ்செய்தியை அனுப்பினால் காவலர்களை வந்தடையும்” எனவும் தெரிவித்தார்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, செய்முறை விளக்க காட்சிகளாக விளக்கப்பட்டது. இந்நிகச்சியில் சேலையூர் உதவி ஆணையாளர் சகாதேவன் மற்றும் சேலையூர் காவல் ஆய்வாளர் மற்றும் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
இதையும் படிக்க: கடையில் புகுந்து பெண்ணை தாக்க முயற்சி... வெளியான சிசிடிவி காட்சி!