சென்னை: சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சந்தையை அமைச்சர் பாபு இன்று (ஜன.15) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பொங்கலை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் விற்பனை என்பது சில்லறை வியாபாரிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. அதேபோல் அதேபோல் மொத்த வியாபாரிகளுக்கும் பெருமளவு லாபம் ஈட்டி தரக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகை என்பதால் வரும் 17ஆம் தேதி வரையில் விற்பனை அங்காடிக்கு வாகனங்களின் வருகை அதிகமாக இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கக் காவல் துறையினர் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகப் பொங்கல் பண்டிகை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்குப் பொருட்களின் வரத்து அதிகம் இருக்கும். அதேபோல் பொதுமக்களின் வருகையும் அதிகம் காணப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் அதிக அளவு காவல் துறையினர் இந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு சந்தையின் வாகனம் நிறுத்தும் இடத்தில் மருத்துவமனை அமைக்க கருத்துரு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சரின் அனுமதி பெற்று மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை 3 நாட்கள் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் - எனது தனிப்பட்ட முடிவல்ல" - நடிகர் விஷால்!