நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேரந்தவர் முத்து (80). இவரது மகன் பாலாஜி கட்டடத் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
அதேபோல், கடந்த திங்கட்கிழமை இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது, பாலாஜி அவரது தந்தை முத்துவை தாக்கியதில் தலை மற்றும் கை பகுதியில் அடிபட்டு முத்து மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் முத்துவை அவரது பேரன்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
![நெற்குன்றம் கொலை குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் சென்னை குற்றச் செய்திகள் chennai district news chennai crime news son beaten and killed his father in nerkundram nerkundram murder](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5119640_picture.jpeg)
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பாலாஜியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது!