ETV Bharat / state

சமூக நலத்துறையில் உதவி இயக்குநர் பணிக்கு நேர்காணல் - Social Welfare Nutritious Meal Programme Department

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Social Welfare Nutritious Meal Programme Department

author img

By

Published : Jul 29, 2021, 7:38 AM IST

சென்னை: இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018, 19ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொதுப்பணிகள் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை உதவி இயக்குநர் பதவியில் பெண் விண்ணப்பதாரர்கள் 13 பேரை நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 2019 நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வை 2,955 பேர் எழுதினர். அதேபோல் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவியில் 89 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2019 நவம்பர் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 3,187 பேர் எழுதினர்.

இவர்களில் 218 பேர் தற்காலிகமாக நேர்முகத்தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆவின் ஊழல் - நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.