ETV Bharat / state

18 வயது திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க பரிசீலனை - அமைச்சர் கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

18 வயது திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

உதயநிதி விடுத்த கோரிக்கை.. 18 வயதுடைய திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் கீதா ஜீவன் social-welfare-minister-geetha-jeevan-says-government-is-considering-providing-assistance-to-transgender-people-over-age-of-18

author img

By

Published : Apr 30, 2022, 12:33 PM IST

சென்னை நங்கநல்லூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், தலா 50 ஆயிரம் என 51 திருநங்கைகளுக்கு 25,50,000 ஆயிரம் மானியமும், அதுபோல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் 19 குழுக்களுக்கு 14 லட்சத்து 50 ஆயிரம் சுழல் நிதியும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "கடந்த 2008 ஆம் ஆண்டு வரையில் திருநங்கைகள் படிக்க முடியாமல், குடும்ப அட்டை இல்லாமல் இருந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் திருநங்கை என பெயரிட்டு அதற்கான வாரியம் அமைத்தார். அதனை அடுத்து அவர்களுக்கு சமுகத்தில் மரியாதை கிடைத்தது, படிக்க முடிந்தது.

ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் மூன்றாம் பாலின வாரியம் என பெயர் மட்டும் தான் மாற்றினார்கள். உதவி கிடைக்கவில்லை. எனவே கருணாநிதி வழியில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதனை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 18 வயது நிறைவடைந்த திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க கோரினார்.

எனவே அரசு அதனை பரிசீலனை செய்து வருகிறது. அததேபோல் தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக எளிய முறையில் பதிவு செய்ய ஆன்ராய்டு ஆப் செயலி உள்ளது. அதிலும் பதிவு செய்து அரசு உதவி பெற்று கல்வி மற்றும் உழைப்பால் சமுதாய சேவையாற்றிட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதையும் படிங்க: 2022-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது" அ.மர்லிமாவுக்கு வழங்கப்பட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.