ETV Bharat / state

University of Madras: சென்னை பல்கலை. நிதிச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு - சமூக நீதி கண்காணிப்புக் குழு

author img

By

Published : Jan 11, 2023, 8:01 PM IST

Updated : Jan 11, 2023, 10:54 PM IST

University of Madras : சென்னை பல்கலைக்கழகத்தில் (The University of Madras) நிலவும் நிதி சுமைக்கு, தீர்வு காண்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சமூக நீதி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
University of Madras: சென்னை பல்கலை. நிதிச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு - சமூக நீதி கண்காணிப்புக் குழு

University of Madras: சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் (The University of Madras) நிலவும் நிதிச் சுமை சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என சமூக நீதி கண்காணிப்புக் குழு இன்று (ஜன.11) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு அநீதி ஏற்படாமல் கண்காணிப்பதற்காக சுப. வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்றுள்ளதா என்பதையும் அதில் உள்ள சிக்கல்களை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் (Social Justice Monitoring Committee) உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், கருணாநிதி ஆகியோர் இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர். சமூக நீதி கண்காணிப்புக் குழுவிற்குத் தேவையான தகவல்களை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, சமூக நீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், கருணாநிதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 'தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர் நியமனங்களில் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்.

அரசுக்கு அறிக்கை: ஏற்கனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மையப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. சென்னையில் 6 பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு நிதி பிரச்னை உள்ளது. அது தொடர்பாகவும் எங்கள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்போம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் இடங்களிலும் சமூக நீதிக்கு பிரச்னை வரும் நிலையில் தேவைப்பட்டால் அங்கும் நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம்.

பல்கலைக் கழகங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அனைத்து சமூக நீதிப் பிரச்னைகளிலும் இந்தக் குழு ஆய்வு செய்யும். எங்கெல்லாம் சமூக நீதிக்கு பிரச்னை வருகின்றதோ? அங்கெல்லாம் இக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்போம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jobs: அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம் - பங்கேற்க கலெக்டர் அழைப்பு

Last Updated : Jan 11, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.