இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிற்கு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 31.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று (மே.15) காலை வந்து சேர்ந்தது.
இதுவரை தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் 111.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்து சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து 40 டன் ஆக்ஸிஜன் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டிற்கு ஒடிசா மாநிலத்திலிருந்து ஆக்ஸிஜன் வரவுள்ளது.
இந்தியன் ரயில்வே இதுவரை 139 ரயில்கள் மூலம் 8,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை இந்தியா முழுவதும் கொண்டு சென்றுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் இருந்து வந்த ஆக்ஸிஜன் !