ETV Bharat / state

மோப்ப நாய்களின் 10 ஆண்டு பயணம் நிறைவு... பிரிய மனமின்றி தவித்த அலுவலர்கள்! - sniffer dogs retired after 10 years

சென்னை விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜி,பாதல் ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் ஓய்வு பெற்றன.

மோப்ப நாய்
மோப்ப நாய்
author img

By

Published : Aug 20, 2021, 11:43 AM IST

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ராஜி,பாதல் ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் நேற்று ஓய்வு பெற்றன.

இந்த இரண்டு நாய்களும் விமான நிலையத்தில் துல்லியமாக மோப்ப சக்திகளுடன் வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய திறனுடையது. பல உயர் அலுவலர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது.

களத்தில் புதிய மூன்று நாய்கள்

இந்த இரண்டு நாய்களும் தற்போது ஓய்வு பெற்றுள்ளது. இதற்குப் பதிலாக புதியதாக தேஜஸ்,புரோனோ,வெற்றி என மூன்று மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஓய்வுபெற்ற இரண்டு நாய்களைப் பாராட்டும் விதமாகவும்,புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று நாய்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார், கால்நடை மருத்துவர் பரணி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை,ஐ,ஜி ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாய்களுக்கு பாராட்டு விழா

அப்போது, ஓய்வு பெற்ற இரண்டு நாய்களுக்கும் மெடல், மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று நாய்களையும் அறிமுகப்படுத்தி மாலைகள் அணிவிக்கப்பட்டன. அவை வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் விதமாக ஒத்திகை செய்முறைகளும் நடத்தப்பட்டன.

மோப்ப நாய்களின் 10 ஆண்டு பயணம் நிறைவு

தொடர்ந்து, ஓய்வு பெற்ற இரண்டு நாய்களையும் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

நாய்களுடன் நாம் நண்பனாக பழக வேண்டும்

இதுகுறித்து பேசிய விமான நிலைய இயக்குநர் சரத்குமார், " பாதல், ராஜி என்ற இரண்டு நாய்களும் பத்து வருடங்கள் பணி முடிந்து ஓய்வு பெறுகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான நாள். இரண்டு நாய்களும் சிறந்த முறையில் பணியாற்றி வந்தன.

புதிதாக பணியில் மூன்று நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இவை விமான பயணிகளின் பாதுகாப்புக்காக செயல்படும்.நாய்களுடன் நாம் நண்பனாக பழக வேண்டும் அதை எதிரியாகப் பார்க்கக் கூடாது" என்றார்.

மறக்க முடியாத நாள்

தொடர்ந்து, கால்நடை மருத்துவர் பரணி கூறுகையில், "இரண்டு நாய்களும் வெடி பொருள்களை துல்லியமாகக் கண்டுபிடிக்க கூடிய திறனுடையது.

இரண்டு நாய்களும் பத்து வருடங்கள் எங்களுடன் பழகி தற்போது ஓய்வு பெறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இது மறக்க முடியாத நாள். எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்து செல்வது போல் உணர்கிறேன்.

இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஸ்ரீராம் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் குழுவில் இந்த நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாய்களுக்கு அனைத்து விதமான ட்ரெய்னிங்களும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அளித்து வந்தனர்" என்றார்.

நானே தத்தெடுத்து வளர்க்க போகிறேன்

அதே போல், பாதல் நாயை பராமரித்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் குமார் கூறுகையில், "இந்த இரண்டு நாய்களையும் பத்து வருடங்களாக பராமரித்து வருகிறோம். இவை மிகவும் ஒழுக்கமாகவும்,மிகத் திறமையாகவும் செயல்பட்டு வந்தன.

தற்போது 10 வருடங்கள் முடிந்து ஓய்வு பெறுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நாய்கள் எங்களுடன் மிகவும் பாசமாக பழகி வந்தது. பாதல் நாயை பிரிய மனமில்லை. அதை நானே தத்தெடுத்து வளர்க்க இருக்கிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்பத்தினரைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரிழந்த நாய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.