ETV Bharat / state

சென்னையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ஸ்மார்ட் போன்கள் திருட்டு - breaking into shops

கோடம்பாக்கத்தில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ஸ்மார்ட் போன்கள் கொள்ளை

author img

By

Published : Nov 30, 2022, 8:45 PM IST

சென்னை: கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(26). இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் இரவு (நவம்பர் 28) வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையினுள் சென்று பாரத்த போது, சர்வீஸ்க்கு வந்திருந்த 25 ஸ்மார்ட்போன் மற்றும் 20 பேசிக் மாடல் செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணிராஜ் அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது தான், அடுத்தடுத்து மூன்று கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்குள்ள பால் கடை ஒன்றில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ஸ்மார்ட் போன்கள் கொள்ளை

அதில் அடையாளம் தெரியாத இருவர் முதலில் பால் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று எதுவும் சிக்காததால், அடுத்தப்படியாக செல்போன் சர்வீஸ் கடை மற்றும் மளிகை கடை என தொடர்ச்சியாக மூன்று கடைகளை உடைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய இருவரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மெரினாவில் ஜோடியிடம் கைவரிசை.. போலி போலீஸ் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.