தமிழ்நாடு உள்துறைச் செயலராகப் பதவி வகித்த நிரஞ்சன் மார்டின் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலராக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, பணி ஓய்வு பெற்ற நிரஞ்சன் மார்டி அலுவலர்கள் புடைசூழ பிரியா விடைபெற்றார். புதிதாக பதவி ஏற்றுள்ள உள்துறைச் செயலரை டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: