ETV Bharat / state

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 16 பேர் கைது

author img

By

Published : May 5, 2021, 3:41 PM IST

சென்னை: இதுவரை கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற 16 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற 16 பேர் கைது

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழலில் கல்லீரல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் மூலம் இம்மருந்து 800 ரூபாய் முதல் 3,000 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

கரோனாவால் பாதிப்பிற்குள்ளான ஏராளமானோர் இம்மருந்தை வாங்குவதால் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி சிலர் ரெம்டெசிவிர் மருந்தை திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கள்ளச் சந்தையில் ஒரு ரெம்டெசிவிர் மருந்து 5 ஆயிரத்தில் தொடங்கி, 20 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக காவல் துறையினர், மருந்துக் கட்டுப்பாட்டு துறையினர், குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

நோயாளிகளின் தேவையை பயன்படுத்தி இதுவரை ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற இம்ரான்கான், ராம் சுந்தர் ஆகிய இரு தனியார் மருத்துவர்கள் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மேற்குத் தாம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30 ஆம் தேதி பல்லாவரத்தில் 2 பேர், பள்ளிக்கரணையில் 2 பேர், ஐ.சி.எஃப் பகுதியில் 2 பேர், வேப்பேரியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று (மே.4) கிண்டியிலும் ஒரு தனியார் மருத்துவர் உட்பட 2 பேர் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று (மே.5) சென்னை வேப்பேரியில் தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் இருந்து 6 ரெம்டெசிவிர் மருந்துகளைத் திருடி கள்ளச் சந்தையில் 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த மருந்தாளுநர் ஜெயசூர்யா, அவரிடம் இருந்து மருந்தை வாங்கிய தனியார் மருத்துவமனை ஊழியர் ஸ்டாலின் தாமஸ் ஆகிய இருவரை வேப்பேரி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்த விவகாரத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மருத்துவர் உட்பட 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.