ETV Bharat / state

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம் - corona postive for six at malayalam biggboss

பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா

author img

By

Published : May 16, 2021, 10:38 AM IST

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதையடுத்து தெலுங்கு, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

மலையாளத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். கரோனா தொற்றுக் காலம் என்பதால் அங்குள்ள ஊழியர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர் - நடிகைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது

இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு புதன்கிழமை தோறும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர் நடிகைகள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இதனால் இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குட்லக் சதீஷ் மறைவிற்கு சிம்பு இரங்கல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.