ETV Bharat / state

ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே ஆசாமிகள் கைது...

சென்னை: மின்சார ரயில்களில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகை, செல்போன்களை திருடிய ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Aug 30, 2019, 2:10 AM IST

கைது

சென்னை மின்சார ரயிலில், கடந்த 28ஆம் தேதி வசந்தா என்ற பெண், பயணம் செய்துள்ளார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரின் கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஆறு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலாசா ராய்(43), கவுதம் தாஸ்(42), சுமித் பட்டக்(21), சங்கரல் அகர்வால், கோபால் மோதி, ரதோஸ்யாம் ராய் சவுத்திரி ஆகியோர் கொள்ளையடிக்கும் கும்பல் என தெரியவந்தது. மேலும், இவர்கள் ஒன்று சேர்ந்து ரயில் பயணிகளின் கவனத்தை திருப்பி, நகைகள், செல்போனை பறித்து செல்வது வாடிக்கையாக மேற்கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ரயிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேர்

மேலும் இவர்கள் திருடிய நகைகள், செல்போன்களை சொந்த ஊரில் கொண்டு சென்று விற்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 4 சவரன் நகைகள், 5 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், ஆறு பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Intro:nullBody:மின்சார ரயில்களில் பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி நகை மற்றும் செல்போன்களை திருடும் 6 பேர் கொண்ட கும்பல் கைது..

சென்னை மின்சார ரயிலில் கடந்த 28ஆம் தேதி பயணிக்கும் போது ஒரு மர்ம கும்பல் கவனத்தை திசைதிருப்பி நகைகளை பறித்து சென்றதாக கூறி வசந்தா என்ற பெண்மணி சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இப்புகாரின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே போலிசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 6பேரை போலிசார் விசாரணை செய்தனர்.பின்னர் விசாரணையில் இவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பலாசா ராய்(43),கவுதம் தாஸ்(42),சுமித் பட்டக்(21),சங்கரல் அகர்வால்,கோபால் மோதி,ரதோஸ்யாம் ராய் சவுத்திரி ஆகியோர் கொள்ளையடிக்கும் கும்பல் என தெரியவந்தது.மேலும் இவர்கள் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுடன் ஒன்று சேர்ந்து பயணித்து பயணிகளை இடித்து அவர்களின் கவனத்தை திருப்பி தங்களில் ஒரு நபர் நகைகள் மற்றும் செல்போனை பறித்து செல்வது வாடிக்கையாக மேற்கொண்டு வந்துள்ளனர்.மேலும் இவர்கள் திருடிய நகைகள் மற்றும் செல்போன்களை சொந்த ஊரில் கொண்டு சென்று விற்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதே போல் கொள்ளையடித்து செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.பின்னர் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 4சவரன் நகைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் குற்றவாளி 6பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..Conclusion:null

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.