ETV Bharat / state

எஸ்.பி வருண்குமார் மனு.. எக்ஸ் வலைத்தள அதிகாரிக்கு பறந்த உத்தரவு! - trichy SP Varunkumar case

திருச்சி எஸ்பி வருண்குமார் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு மற்றும் எக்ஸ் வலைத்தளம் பொறுப்பு அதிகாரி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

எஸ்.பி வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரை
எஸ்.பி வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்கக் கோரி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நான் திருச்சி மாவட்ட எஸ்பியாக கடந்த 2023 ஆகஸ்ட் 11 முதல் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தோம்.

எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவு: இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக ஊடகங்களில், நான் சாதிப் பாகுபாடு பார்ப்பதாக என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். இதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் சீமானுடன் சேர்ந்து என்னை இழிவுபடுத்தி பேட்டி கொடுத்துள்ளனர். தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளிவந்ததால், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி தில்லைநகர் போலீசில் மீண்டும் புகார் கொடுத்தேன்.

புகாரின் அடிப்படையில், பெயர் தெரியாத 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு பெயர் தெரியாத அந்த நபர்களின், (X) எக்ஸ் ஐடிக்கள் தேவை. அப்போதுதான் சரியான விசாரணையை மேற்கொள்ள முடியும். இதையடுத்து, திருச்சி தில்லைநகர் போலீசார் பெங்களூருவில் உள்ள எக்ஸ் கார்ப்பரேசனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆனால், உரிய தகவல்களை அந்த நிறுவனம் தரவில்லை. ஆன்லைன் மூலம் தொல்லை கொடுப்பது, போலி ஐடிக்களை உருவாக்கி மற்றவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது போன்றவற்றை தடுக்கவில்லை என்றால், அதுபோன்ற நபர்களுக்கு எக்ஸ் கார்ப்பரேசன் துணை போகிறது என்றே அர்த்தம். எனவே, திருச்சி தில்லை நகர் போலீசாரின் கோரிக்கையை, எக்ஸ் கார்ப்பரேசன் பரிசீலிக்காததால் எக்ஸ் தளத்தின் பதிவுகள் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவி வருகிறது.

எக்ஸ் கார்ப்பரேசன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து திருச்சி தில்லைநகர் போலீசாரை தொடர்பு கொண்டு, வழக்கு குறித்து கேட்டபோது அவர்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. எக்ஸ் கார்ப்பரேசன் உரிய தகவல்களை தரவில்லை என்றால் எங்களுக்கு சமூகத்தில் உள்ள மரியாதை குறைந்துவிடும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவுகளின்படி, சம்மந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரி தகவல் கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தரவேண்டும். அவர்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இந்திய குறைதீர் அதிகாரிக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி எனது கோரிக்கைகள் முழுவதையும் அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை பதிவிட்டுள்ளதால் வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

என் குடும்பத்தினர் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளை நீக்கவில்லை என்றால், எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். எனவே, ஆட்சேபனைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளம் நீக்குமாறு உத்தரவிட வேண்டும். உரிய தகவல்களை தராத அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

திருச்சி தில்லைநகர் போலீசார் கேட்ட தகவல்களை தருமாறு எக்ஸ் கார்ப்பரேசனுக்கு உத்தரவிட வேண்டும். எனது புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு திருச்சி தில்லைநகர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்பி வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவல்துறை அதிகாரியாக எனது கடமையை செய்த போது என் மனைவி மற்றும் குழந்தைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கபட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, எக்ஸ் தளத்திலிருந்து இது போன்ற பதிவுகளை உடனடியாக நீக்கவும், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நபர்களின் விவரங்களைத் தர வேண்டும்” என வாதிட்டனர்.

இதனையடுத்து, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் குறித்து உரிய விளக்கம் கேட்டு பதில் அளிக்க கால அவகாசம் கோரினார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் ஆண்டனி பிரபாகர், “சமூக வலைத்தளங்களில் இது போன்று அவதூறான கருத்துக்களை போலி முகவரி கொண்டு பதிவிடுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தளக் கணக்குகள் துவங்கும் போது ஆதார் அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர் புகார் குறித்து மத்திய அரசு மற்றும் X வலைத்தளம் பொறுப்பு அதிகாரி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.