பல மொபைல் போன் நிறுவனங்கள் இந்தியாவில் வந்துபோனாலும், அப்படியே போகாமல் திரும்பிவந்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டு நிரூபித்துக் காட்டியது லாவா நிறுவனம். இவர்களின் அக்னி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்போது, புதிய லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) மொபைலை அறிமுகம் செய்துள்ளனர்.
மேம்பட்ட கேமராக்கள், முன்பக்கம் பின்பக்கம் என இரண்டு அமோலெட் திரைகள், டெலிஃபோட்டோ லென்ஸ், 66W திறனுடன் வரும் வேகமான சார்ஜிங் வசதி, 5,000 mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
AGNI 3: #BurnTheRules of photography powered by 50MP Sony Sensor Camera with OIS. Get ready to experience the segment-leading camera performance.
— Lava Mobiles (@LavaMobile) October 2, 2024
Launching on Oct 4th | 12 PM
Register for the Launch Event: https://t.co/kpTeLdMfxK
Only on Amazon
#AGNI3ComingSoon #ProudlyIndian pic.twitter.com/oYOJSXR4GE
கவனிக்க வேண்டிய சிறப்புகள்:
- சிறந்த திரை: 6.78-அங்குல (இன்ச்), 1.5K ரெசல்யூஷன், 120 Hz ரெப்ரெஷ் ரேட், வைட்வைன் எல்1 ஆதரவுடன் வரும் வளைந்த 3டி அமோலெட் எச்டிஆர் (HDR) திரை. பின்பக்க கேமரா அமைப்புடன் சின்ன அமோலெட் திரை பொருத்தப்பட்டுள்ளது.
- சூப்பர் கேமரா: 50 மெகாபிக்சல் சோனி கேமரா OIS ஆதரவுடன் முதன்மை சென்சார் ஆகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரும், ஒரு 3x டெலிபோட்டோ லென்ஸும் இணைக்கப்பட்டுள்ளன.
- திறன்மிக்க சிப்செட்: இந்த விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதன்மையான சிறந்த சிப்செட்டை லாவா இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் டிமென்சிட்டி 7300x சிப்செட் லாவா அக்னி 3 5ஜி போனை இயக்குகிறது. இதனுடன் LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ், பெரிய வேப்பர் சாம்பர் கூலிங் வழங்கப்பட்டுள்ளன. இதே சிப்செட்டை நீங்கள் மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 50 (Motorola Razr 50 Foldable Phone) ஸ்மார்ட்போனின் பார்த்திருப்பீர்கள்.
- ஆக்ஷன் பட்டன்: பயனர்கள் ஐபோன்களில் காணும் ஆக்ஷன் பட்டனை, லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனிலும் காண முடியும். இதனை வைத்து பல செயலிகளை திறக்கவும், பல செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியும்.
லாவா அக்னி 3 5ஜி விலை:
Introducing AGNI 3
— Lava Mobiles (@LavaMobile) October 4, 2024
Sale Starts 9th Oct | 12 AM
Special Launch Price: Starting ₹19,999*
Only on @amazonin
*Incl. of bank offers#AGNI3 #BurnTheRules #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/7qqEBDvKWX
லாவா அக்னி 3 5ஜி போன் வகைகள் | விலை |
8ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ் (சார்ஜர் இல்லாமல்) | ரூ.20,999 |
8ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ் (66W சார்ஜர் உடன்) | ரூ.22,999 |
8ஜிபி ரேம் / 256ஜிபி ஸ்டோரேஜ் (66W சார்ஜர் உடன்) | ரூ.24,999 |
லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள்:
- 6.78-அங்குல அமோலெட் திரை
- பின்பக்க மினி அமோலெட் திரை
- மீடியாடெக் டிமென்சிட்டி 7300x சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் OIS கேமரா + 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ்
- 16 மெகாபிக்சல் சாம்சங் செல்ஃபி கேமரா
- 5,000 mAh பேட்டரி, 66W சார்ஜிங் ஆதரவுடன்
- ஆண்ட்ராய்டு 14 (இரண்டு வருட அப்டேட் உடன்)
- டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இதையும் படிங்க |
முன்னதாக, சியோமி நிறுவனத்தின் மி 11 அல்ட்ரா (Mi 11 Ultra) ஸ்மார்ட்போன்களில் தான் இதுபோன்ற பின்பக்க திரையை நாம் பார்த்திருப்போம். பின்பக்க கேமராவில் இருந்து அழகான செல்பிகளை எடுக்கவும், அழைப்புகளை நிர்வகிக்கவும் இந்த குட்டி டிஸ்ப்ளே பயன்படுவது தான், இந்த போனின் மேம்பட்ட அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.