சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, நடிகரும், ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை நேற்று நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பதி திருமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் ஒரு சனாதன இந்து என்று பெருமையாக கூறிக் கொள்கின்றேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. இங்கு தமிழர்கள் அதிகம் பேர் இருப்பதால், தமிழிலேயே பேச விரும்புகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவர் சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும், அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச முடியுமா?” என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், இன்று இது தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, “Let's wait and see” என பதிலளித்தார்.
#WATCH | On Andhra Pradesh Deputy CM Pawan Kalyan's remark 'Sanatana Dharma cannot be wiped out and who said those would be wiped out', Tamil Nadu Deputy CM Udhayanidhi Stalin says " let's wait and see" pic.twitter.com/YUKtOJRnp9
— ANI (@ANI) October 4, 2024
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றைப் போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்’ உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் என நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தது. மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பல நீதிமன்றங்களில் வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.