தமிழ்நாடு சிவசேனா கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து 5 முதல் 10 நாட்கள் வரை வழிபட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது என்பது ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி சிலை வைக்கவும், சிலைகள் எடுத்து செல்லவும் தங்கள் அமைப்பு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துள்ளதால், விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.