ETV Bharat / state

கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஸ்டாலினுடன் சந்திப்பு - கன்னட நடிகர் சிவராஜ்குமார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கன்னட நடிகர் சிவராஜ்குமார் இன்று (பிப்ரவரி 13) முகாம் அலுவலகத்தில் அவரின் மனைவியுடன் சந்தித்தார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் - முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

author img

By

Published : Feb 13, 2022, 3:12 PM IST

சென்னை: கன்னட திரைப்பட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், முக்கிய கன்னட நட்சத்திர நடிகருமான சிவராஜ்குமார் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தன் மனைவி கீதா சிவராஜ்குமாருடன் சென்று சந்தித்தார்.

இவரின் சகோதரரும் மற்றொரு கன்னட முக்கிய நட்சத்திரமுமான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு, கன்னட திரையுலகம், புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் துயரச் சம்பவமானது.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் - முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
கன்னட நடிகர் சிவராஜ்குமார் - ஸ்டாலின் சந்திப்பு

இந்நிலையில் அவரது சகோதரரிடம் சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. சில நேரம் நீடித்த இச்சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பினரிடமிருந்து கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களை காப்பாற்றியது மத்திய அரசுதான், திமுக இல்லை - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.