ரயில்களில் மாற்றுத்திறனாளிகள், பெண்களின் இருக்கைகளில் வேறு பயணிகள் ஆக்கிரமிப்பு செய்வதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரயில்களில் இது தொடர்பாக திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ரயில்வே விதிகளை மீறி மாற்றுத்திறனாளிகளின் இடத்தில் 139 மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பு செய்து பயணம் செய்தது தெரிந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
இதேபோல் 4ஆம் தேதி நடத்திய சோதனையில் பெண்களுக்காக ஒதுக்கப்படும் இடத்தில் ஆண்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி 65 பயணிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என ரயில்வே பாதுகாப்புப் படை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்!