ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு; தனி நீதிபதி உத்தரவு ரத்து - டிஜிபி தரப்பில் மேல்முறையீடு

அரசின் பெருந்தன்மையால் பணி நியமனம் பெற்ற 98 காவல் உதவி ஆய்வாளர்களுக்குப் பணிமூப்பு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு
காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு
author img

By

Published : Oct 21, 2022, 10:28 PM IST

சென்னை: கடந்த 1995ஆம் ஆண்டு 1100 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், பணி நியமனத்துக்குத் தகுதி பெற்ற 1206 பேரில், 8 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலிப் பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.

பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்குத் தமிழக அரசு 1999ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கியது. இதுசம்பந்தமான அரசாணையில் 1997 98ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்களுக்குக் கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1994- 95இல் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் தங்களுக்குப் பணிமூப்பு கேட்க மாட்டோம் என உத்தரவாதமும் அளித்திருந்தனர். இந்நிலையில் 1994-95ல் படி பணி மூப்பு வழங்கக் கோரி 20 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதன்பின்னர் மேலும் சிலர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மற்றொரு தனி நீதிபதி, மனுதாரர்களுக்குப் பணி மூப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கதவர்த்தி அமர்வு, இரண்டாவதாகத் தொடரப்பட்ட வழக்குகளைத் தனி நீதிபதி வழக்கை ஏற்றுக்கொண்டதன் மூலம் 1997-98இல் நியமிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு முன் பணி மூப்பு அடைந்தவர்கள் ஆகிவிடுவார் என்பதால், அவர்களின் விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவிலிருந்து மாறுபட்ட உத்தரவைப் பிறப்பிக்கும்போது, அதை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்விற்குத்தான் பரிந்துரைத்திருக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

98 உதவி ஆய்வாளர்கள் நியமனம் என்பது அரசின் பெருந்தன்மை அடிப்படையிலானது என்றும், பணி மூப்பு கேட்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, இவர்களுக்குப் பணிமூப்பு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கழிவு மேலாண்மையில் கவனம்; மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.